/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீதோஷ்ண மாற்றம் எதிரொலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
/
சீதோஷ்ண மாற்றம் எதிரொலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
சீதோஷ்ண மாற்றம் எதிரொலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
சீதோஷ்ண மாற்றம் எதிரொலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
ADDED : அக் 26, 2024 11:05 PM
திருப்பூர்: அவ்வப்போது வெயில், தொடர் மேகமூட்டம், மாலை, இரவில் குளிர்ந்த காற்றால், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல்நலக்குறைபாடுகள் அதிகமாகி வருகிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்கள், முதியவர்கள், தொடர் மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்பவர், அடிக்கடி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்று திரும்புவோர் இக்காலகட்டத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
''உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களை சந்தித்து, சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதே நாளில் சரியாகி விடும். ஆனால், பெரும்பாலானோர் அலட்சியமாக இரண்டு அல்ல மூன்று நாள் கழித்து, காய்ச்சல் சரியாகாமல் போன பின் வருகின்றனர். இதனால், காய்ச்சல் சரியாக மேலும் இரண்டு நாட்களாகிறது. உடலும் சோர்ந்து விடுகிறது. தற்போது, சீதோஷ்ண நிலை மாறி மாறி, பதிவாகிறது.
துாறல் மழையால், குளிர் அதிகமாகிறது. எனவே, சூடான ஆகாரங்களை சாப்பிடுவதுடன், துாய்மையான தண்ணீரை, காய்ச்சி, ஆற வைத்துக் குடிப்பது, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை பாதிப்புகளை தடுக்கும்'' என்கின்றனர் அரசு டாக்டர்கள்.