/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிப்ட்-டீ கல்லுாரியில் ஆடை விற்பனை கண்காட்சி
/
நிப்ட்-டீ கல்லுாரியில் ஆடை விற்பனை கண்காட்சி
ADDED : ஜன 09, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், மாணவர்கள் தயாரித்த ஆயத்த ஆடை களின் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், கண்காட்சி அரங்கை திறந்துவைத்தார்.
மாணவ, மாணவியர் தாங்கள் தயாரித்த புதுவித டிசைன்களுடன் கூடிய ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடை ரகங்கள்; வீட்டு உபயோக ஜவுளி ரகங்கள், அழகிய கைவினை பொருட்களை காட்சிப்படுத்தினர். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சி வாயிலாக தாங்களே விற்பனை செய்வதால், மாணவர்கள் மத்தியில், தொழில்முனைவேராக வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கும் என, கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

