/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் தேங்காய் உப பொருட்கள் விலை
/
விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் தேங்காய் உப பொருட்கள் விலை
விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் தேங்காய் உப பொருட்கள் விலை
விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் தேங்காய் உப பொருட்கள் விலை
ADDED : ஜன 02, 2026 05:36 AM
பொங்கலுார்: கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக தென்னை உள்ளது. இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் தேங்காய் விலை உச்சத்தை தொட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக கொப்பரை விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
கிலோவுக்கு, 100 ரூபாய் குறைந்த போதிலும் தேங்காயிலிருந்து கிடைக்கும் உபபொருட்களான உரிமட்டை மற்றும் தொட்டி ஆகியவை நல்ல விலைக்கு விலை போகிறது. தொட்டியில் இருந்து கார்பன் தயாரிப்பது சூடு பிடித்துள்ளது.
உரி மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மஞ்சி, தென்னை நார் கழிவு போன்றவற்றிற்கு தேவை அதிகம் உள்ளது.
ஒரு தேங்காயிலிருந்து கிடைக்கும் உரிமட்டை மற்றும் தொட்டி ஆகியவையே ஆறு ரூபாய் வரை விலை போகிறது. இதனால், கொப்பரை விலை சரிந்த போதிலும் தேங்காய்க்கு ஓரளவு கட்டுப்படியான விலை கிடைக்கிறது.