தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வளர்ச்சி திட்டப்பணிகள் அவிநாசியில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணிகள் அவிநாசியில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணிகள் அவிநாசியில் கலெக்டர் ஆய்வு


ADDED : நவ 06, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 08:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.13.54 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் இன்று (நவ.,6) ஆய்வு செய்தார்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.8.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், அணைப்புதுார் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், பழங்கரை ஊராட்சியில் விவசாயிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட களையெடுக்கும் கருவி, நாற்றுப்பண்ணை, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அவிநாசி நகராட்சியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், ரூ.1.50 கோடி மதிப்பிலான நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கானுார்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் தண்டுக்காரன்பாளையத்தில் வெங்காயச் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us