/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் ஆபீசில் 'மீடியா' கண்காணிப்பு அறை 24 மணி நேரமும் அலுவலர்கள் 'உஷார்'
/
கலெக்டர் ஆபீசில் 'மீடியா' கண்காணிப்பு அறை 24 மணி நேரமும் அலுவலர்கள் 'உஷார்'
கலெக்டர் ஆபீசில் 'மீடியா' கண்காணிப்பு அறை 24 மணி நேரமும் அலுவலர்கள் 'உஷார்'
கலெக்டர் ஆபீசில் 'மீடியா' கண்காணிப்பு அறை 24 மணி நேரமும் அலுவலர்கள் 'உஷார்'
ADDED : மார் 20, 2024 12:29 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ள 'மீடியா' அறையில், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
லோக்சபா தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிக்க துவங்கியுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'மீடியா' கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் திறக்கப்பட்டுள்ள மீடியா அறையில், 'டிவி' திரை பொருத்தப்பட்டு, அலுவலர்கள் கண்காணிக்க துவங்கியுள்ளனர். இக்குழுவினர், திருப்பூர் லோக்சபா தொகுதி, தேர்தல் தொடர்பான உள்ளூர் தொலைக்காட்சி, அனைத்து செய்தித்தாள்கள், வானொலி மற்றும் எப்.எம், குறுஞ்செய்திகள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கண்காணிப்பர்.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு அனுமதி பெற்று தான் ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.
அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான செய்திகள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தால், அவற்றை கண்காணித்து, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக, விளம்பரம் தொடர்பான செலவினங்கள் குறித்து விளக்கம் அளிக்க அறிவுறுத்துவார்கள்.
மாவட்டம் முழுக்க தேர்தல் தொடர்பான செய்திகள், பணம் பட்டு வாடா குறித்த வழக்குதொடர்பான செய்திகளையும், அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.

