/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடைகளை 11ல் மூட கலெக்டர் உத்தரவு
/
மதுக்கடைகளை 11ல் மூட கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 07, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், வரும் 11ம் தேதி மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், வரும் 11ம் தேதி, வள்ளலார் நாளை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் மதுபான கூடங்கள், நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.