/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெற்றோர் இல்லாத குழந்தைகள் கண்டறிய கலெக்டர் உத்தரவு
/
பெற்றோர் இல்லாத குழந்தைகள் கண்டறிய கலெக்டர் உத்தரவு
பெற்றோர் இல்லாத குழந்தைகள் கண்டறிய கலெக்டர் உத்தரவு
பெற்றோர் இல்லாத குழந்தைகள் கண்டறிய கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 24, 2025 11:53 PM
திருப்பூர்: பெற்றோர் இல்லாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை அன்புக்கரங்கள் திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் பிரவீன் கவுதம், தீபா சத்யன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் குழந்தைகள் சார்ந்து மேற்கொள்ளப்படும் நலன் சார்ந்த திட்டங்கள், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குழந்தை திருமணங்கள் செய்யப்பட்ட குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
குழந்தைகள் பிரச்னைகளை கண்டறியும் வகையில், கிராமம், வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மண்டல, வார்டு அளவில் அனைத்து நிலைகளிலும் முறையாக, மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி, குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் குறித்து தீர்மானம் மேற்கொண்டு, அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதியப்படும் வழக்குகளின் விவரங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
இதனால், குழந்தைகளுக்கான உரிய மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு நிதி பெற்று வழங்க உறுதுணையாக இருக்கும். பெற்றோர் இல்லாத குழந்தைகள் இருப்பின் அவர்களை கண்டறிந்து, அன்புகரங்கள் திட்டத்தில் இணைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.