/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரியினங்களை செலுத்த கமிஷனர் வேண்டுகோள்
/
வரியினங்களை செலுத்த கமிஷனர் வேண்டுகோள்
ADDED : செப் 27, 2025 11:48 PM
திருப்பூர்: மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த சொத்து உரிமையாளர்கள், மாநகாராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை முன்னதாக செலுத்தி ஊக்கத் தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், 2025 -26ம் ஆண்டுக்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுகளுக்குரிய சொத்துவரியினை அக்., 31ம் தேதிக்குள் செலுத்தி,இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியில் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகையைப் ெபற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் சொத்து வரி மற்றும் கட்டணங்களை மாநகராட்சி மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் ரொக்கம் அல்லது காசோலையாக செலுத்தலாம்.
மேலும், எளிய முறையில் ஆன்லைன் வாயிலாகவும் இவற்றை செலுத்தலாம். ஜிபே உள்ளிட்ட செயலிகள் வாயிலாக ஸ்கேன் செய்தும், வங்கி கணக்கில் நேரடியாகவும், செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.