/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்புரவு பணியாளருக்கு இழப்பீடு: மா.கம்யூ., போராட்டம்
/
துப்புரவு பணியாளருக்கு இழப்பீடு: மா.கம்யூ., போராட்டம்
துப்புரவு பணியாளருக்கு இழப்பீடு: மா.கம்யூ., போராட்டம்
துப்புரவு பணியாளருக்கு இழப்பீடு: மா.கம்யூ., போராட்டம்
ADDED : டிச 20, 2025 08:59 AM
உடுமலை: உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, சின்னவீரம்பட்டி ஊராட்சியில், துாய்மைப்பணியாளராக பணிபுரிந்து வருபவர் மரகதம்.
கடந்த அக்., மாதத்தில், பணியில் ஈடுபட்ட போது, பழுதடைந்த இரும்பு தொட்டி மூடி கழன்று அவரின் கைகளில் விழுந்து, அவரின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இதுவரை, ஊராட்சி நிர்வாகம் சார்பில், எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. இதைக்கண்டித்து உடுமலை ஒன்றிய அலுவலகம் முன் மா.கம்யூ., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஏரிப்பாளையம் கிளைச்செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினார்.
பாதிக்கப்பட்ட பணியாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குப்பை தொட்டிகளை உரிய காலத்தில் ஆய்வு செய்யாத ஊராட்சி செயலாளர் மற்றும் பி.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்கவும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

