/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏப்., 3 முதல் குண்டடத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்
/
ஏப்., 3 முதல் குண்டடத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்
ஏப்., 3 முதல் குண்டடத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்
ஏப்., 3 முதல் குண்டடத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம்
ADDED : மார் 18, 2025 04:02 AM
திருப்பூர்,: திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், குண்டடம் வட்டத்தில், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், புதிதாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது.
அடுத்த மாதம், 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ், துவக்கி வைக்கிறார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 2025ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணைப்படி, குரூப் 4க்கான, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான தேர்வு அறிவிப்பு, ஏப்., மாதம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
''குண்டடம் பயிற்சி மையத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, வாரந்தோறும், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், காலை, 10:30 மணி முதல், மாலை, 3:30 மணி வரை நடைபெறும். மாதம் இருமுறை, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சி மையத்தில் திறன்மிகு ஆசிரியர்கள், ஸ்மார்ட் போர்டு வசதியுடன் கூடிய வகுப்பறைகள், தேர்வுக்கு தேவையான புத்தகங்களுடன் கூடிய நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்திலோ, 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.