தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாசகர்களின் புகார்கள்

வாசகர்களின் புகார்கள்

வாசகர்களின் புகார்கள்


UPDATED : நவ 01, 2026 05:30 PM

ADDED : நவ 01, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 05:30 PM ADDED : நவ 01, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிகாரிகள் கவனத்துக்கு...

திருப்பூர், தாராபுரம் ரோடு, எஸ்.ஆர்.டி. பஸ் டிப்போ முன்புறம் சாலை சேதமாகி சரிசெய்யவில்லை. சாலையின் பாதி வரை பேரிகார்டு தடுப்பு வைத்துள்ளனர்.

– மீனாட்சிசுந்தரம், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

ரோடு படுமோசம்

1. போயம்பாளையம், மும்மூர்த்திநகர், ஏ.கே.ஆர். சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.

– வசந்தி, மும்மூர்த்திநகர். (படம் உண்டு)

2. அவிநாசிலிங்கம்பாளையம், பெரியார் காலனியில் உள்ள கான்கீரிட் சாலை சேதமாகி மழைநீர் தேங்கி நிற்கிறது.

– பாலா, அவிநாசிலிங்கம்பாளையம். (படம் உண்டு)

3. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் பாலம் ரவுண்டானா வளைவில் சாலை பாதி துாரம் வரை சேதமாகியுள்ளது.

– ராஜகோபால், அணைக்காடு. (படம் உண்டு)

அசுத்தமான கால்வாய்

திருப்பூர், 42 வது வார்டு, தனலட்சுமி லே–அவுட் மணல் தோட்டம் பகுதியில் கால்வாயில் குப்பை நிறைந்துள்ளது.

– ஞானசேகரன், பாரப்பாளையம். (படம் உண்டு)

வீணாகும் கழிப்பிடம்

குண்டடம், எல்லப்பாளையம்புதுார், சக்திவிநாயகபுரத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டி, மின்இணைப்பு வழங்காததால், திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.

– பாலாஜி, கொடுவாய். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

1. பொங்குபாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே வெளியேற வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

– நாகராஜ், பொங்குபாளையம். (படம் உண்டு)

2. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை காலனியில் கால்வாய் கட்ட வேண்டும். குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

– ராஜவேலு, பாரப்பாளையம். (படம் உண்டு)

காத்திருக்கும் ஆபத்து

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தட்டாங்குட்டை – அத்திக்காடு ரோட்டில் மழையால் உருவான திடீர் குழியை மூட வேண்டும்.

– குட்டிகுமார், ஈட்டிவீரம்பாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், காதர்சலீமா திருமண மண்டபம் முன் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.

– செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)

திருப்பூர், சூசையாபுரத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் குடிநீர் வீணாகிறது.

– ஷாஜகான், சூசையாபுரம். (படம் உண்டு)

தெருநாய் தொல்லை

திருப்பூர், சாஸ்திரிநகர் இரண்டாவது வீதியில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது.

– திருநாவுக்கரசு, சாஸ்திரிநகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

குப்பை அள்ளிட்டாங்க

திருப்பூர், ஜீவா காலனி கொட்டப்பட்டிருந்த குப்பை அள்ளி விட்டனர்.

– பழனிசாமி, ஜீவாகாலனி. (படம் உண்டு)

திருப்பூர், காந்திநகர், பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி வீதியில் நிறைந்திருந்த குப்பை அகற்றப்பட்டு விட்டது.

– பாலா, பத்மாவதிபுரம். (படம் உண்டு)

ஆபத்து நீங்கியது

அவிநாசி, ராயம்பாளையம், நடுவச்சேரியில் பனைமரத்தின் ஒரு பகுதி சேதமாகி விழும் நிலையில் இருந்தது. செய்தி வெளியானதால், அகற்றப்பட்டு விட்டது.

– செந்தில்குமார், ராயம்பாளையம். (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us