/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
35 முறை குவிந்த புகார்கள்; 'உறக்கம்' தெளிந்த அதிகாரிகள்
/
35 முறை குவிந்த புகார்கள்; 'உறக்கம்' தெளிந்த அதிகாரிகள்
35 முறை குவிந்த புகார்கள்; 'உறக்கம்' தெளிந்த அதிகாரிகள்
35 முறை குவிந்த புகார்கள்; 'உறக்கம்' தெளிந்த அதிகாரிகள்
ADDED : ஜூலை 07, 2025 12:11 AM
திருப்பூர்; அனுப்பர்பாளையம் கிராமிய மின் வாரிய எல்லைக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் வர்த்தக ரீதியான அலுவலகங்கள் செயல்படுகிறது. இங்கு சிறு தொழிற்சாலைக்கான பிரிவில் மின் இணைப்பு வழங்கப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் கடந்தாண்டு அங்கு ஆய்வு செய்த மின் வாரியத்தினர், 93 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதன் பின்னும் முறைகேடான மின் இணைப்பை துண்டிக்கவோ, வகை மாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 12.64லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த முறைகேடு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதற்கு மின் வாரியத்தினர் துணை போவது போல் உள்ளதாக, மின் வாரிய சேர்மனிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டது.
அவ்வகையில், இந்த முறைகேடு குறித்து இதுவரை 35 முறை பல்வேறு கட்டங்களில் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவழியாக இது குறித்து விசாரணை நடத்த மின் வாரியம் முன் வந்துள்ளது. வரும் 10ம் தேதி, கொங்கு நகர் பிரிவு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது.