/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி; மாவட்ட அளவில் 36 பேர் பங்கேற்பு
/
ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி; மாவட்ட அளவில் 36 பேர் பங்கேற்பு
ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி; மாவட்ட அளவில் 36 பேர் பங்கேற்பு
ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி; மாவட்ட அளவில் 36 பேர் பங்கேற்பு
ADDED : அக் 09, 2024 10:18 PM

உடுமலை : திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், முதுகலை ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பவியல் பயிற்சி மாவட்ட அளவில் நடக்கிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பவியல் பயிற்சி, மாவட்ட அளவில் இரண்டு நாட்கள் நடக்கிறது.
இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட அளவில், உடுமலை திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிற்சி வகுப்பு நேற்று துவங்கி இன்று நிறைவடைகிறது.
இந்த பயிற்சி வகுப்பு, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நடக்கிறது. தாராபுரம், உடுமலை, மூலனுார், குண்டடம், குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் சார்பில், 36 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
விசாலாட்சி பெண்கள் கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
முதல்நாள் பயிற்சியில் போஸ்டர் வடிவமைத்தல், உயர்தர ஆய்வகம் குறித்த தகவல்கள், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உட்பட பல்வேறு கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பாபிஇந்திரா, பிரபாகர் செய்திருந்தனர்.