/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு
/
பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு
பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு
பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2024 12:56 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் வசதிக்காக, தெருக்கள் பெயர், பாதசாரிகள் ரோட்டை கடக்கும் இடம், வீதியின் பெயர்களை குறிப்பிட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பெயர் பலகை மற்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
நகரப்பகுதியில், பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல ஏதுவாக, பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி, அதிக மக்கள் கூடும் இடங்களில், ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்ட பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதாவது, பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்லும் பகுதி என்பதை அறிவிக்கும் இடங்களில், 'PEDESTRIAN' என்பதற்கு பதிலாக, 'PEDESTRAIN' என்று தவறான எழுத்துகளுடன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு தவறான விஷயத்தை கற்பிப்பது போல் இருக்கிறது. மாநகராட்சி முழுவதும் வைத்துள்ள பெயர் பலகை மற்றும் அறிவிப்பு பலகையில் உள்ள, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளில் உள்ள பிழைகளை திருத்தி, சரியான வார்த்தைகளுடன் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.