ADDED : ஜூன் 24, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திருப்பூர் மாநகர மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அகில இந்திய செயலாளர், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் சூரஜ்ெஹக்டே பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம். இப்போதிருந்தே தேர்தல் பணிகளில் வேகமாக இருக்க வேண்டும். பூத் கமிட்டி, பணிக்குழு அமைக்கும் பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும். அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு, தமிழக காங்., முக்கியப் பங்காற்றும்'' என்றார். நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்த, சூரஜ் ஹெக்டே திருப்பூர் காங்., நிலவரங்களை கேட்டறிந்தார்.

