/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் அரசியலமைப்பு தின விழா
/
சிக்கண்ணா கல்லுாரியில் அரசியலமைப்பு தின விழா
ADDED : நவ 26, 2024 11:53 PM

திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு - 2 சார்பில், அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர். என்.எஸ்.எஸ்., அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று அலுவலக கண்காணிப்பாளர் அந்தோணிராணி பேசுகையில், ''அரசியலமைப்பு சாசனத்தில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிகளை அறிந்துக் கொள்வது அவசியம். ஜாதி, மதம், இனம், மொழி என, எந்தவொரு வேற்றுமை உணர்வும் இல்லாமல், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்,'' என்றார்.மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன்குமார், ரேவதி, ரூபினா, ஜெயலட்சுமி, தீபஸ்ரீ ஆகியோர் தலைமையில், மாணவ, மாணவியர், சட்ட மேதை அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின், உறுதிமொழி ஏற்றனர்.