ADDED : அக் 29, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில் இருந்து மூணாறு, மறையூர் மற்றும் அமராவதி அணைக்கு செல்லும் பிரதான ரோட்டில், குறிச்சிக்கோட்டையில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைந்துள்ளது. ரோட்டின் இருபுறங்களிலும், கடைகள் வைத்து, இடையூறு செய்கின்றனர்.
மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப் ஆகியவற்றை பயன்படுத்தி விட்டு, 'குடி'மகன்கள் அங்கேயே வீசிச்செல்கின்றனர். அங்குள்ள மழை நீர் வடிகால் முழுமையாக மறையும் அளவுக்கு, பிளாஸ்டிக் பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
இதனால், சுற்றுச்சூழல் மாசடைவதுடன், திறந்த வெளியில் மது அருந்துபவர்களால், கிராம மக்களுக்கும், பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது.
இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

