/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாயில் தொடர் தண்ணீர் திருட்டு; காற்றில் பறக்கும் ஐகோர்ட் உத்தரவு
/
பி.ஏ.பி., கால்வாயில் தொடர் தண்ணீர் திருட்டு; காற்றில் பறக்கும் ஐகோர்ட் உத்தரவு
பி.ஏ.பி., கால்வாயில் தொடர் தண்ணீர் திருட்டு; காற்றில் பறக்கும் ஐகோர்ட் உத்தரவு
பி.ஏ.பி., கால்வாயில் தொடர் தண்ணீர் திருட்டு; காற்றில் பறக்கும் ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 31, 2025 05:12 AM
திருப்பூர்; பருவமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ள அதே நேரம், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் நீர் திருட்டு அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டும் கடைமடை விவசாயிகள், தாங்களே களத்தில் இறங்கி, நீர் திருட்டுக்கு கடிவாளம் போடும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு, நீர்வளத்துறை மற்றும் போலீசாரின் அனுமதியையும் கோரியுள்ளனர்.
பி.ஏ.பி., எனப்படும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகள் கடைமடையாக உள்ளன. 'பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் நீர், கடைமடையை வந்து சேர்வதில்லை' என, கடைமடை விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு, உத்தரவு பெறப்பட்டுள்ளது.
'பிரதான வாய்க்காலில் நடக்கும் நீர் திருட்டு தான், நீர்வரத்து தடைபட காரணம் என்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து தொடுக்கப்பட்ட வழக்கில், 'இத்தகைய நீர் திருட்டை கட்டுப்படுத்த வேண்டும்' எனவும், கோர்ட் வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. இருப்பினும், 'கடைமடைக்கு நீர் வந்து சேர்வதில் தொடர்ந்து பிரச்னை தென்படுகிறது' என, விவசாயிகள் கூறி வருகின்றனர்.
''கடந்த, 20 ஆண்டுகளாக, பி.ஏ.பி., அதிகாரி களின் அலட்சியப் போக்கால், பிரதான கால்வாயில் நாளுக்கு நாள் நீர் திருட்டு அதிகரித்து வருகிறது. சமச்சீர் பாசன திட்டத்தை அதிகாரிகள் புறந்தள்ளியுள்ளனர். வெள்ளகோவில், காங்கயம் பகுதிக்கு வர வேண்டிய தண்ணீர் வந்து சேர்வதில்லை.
இதுதொடர்பாக களப்போரட்டம், சட்டப் போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, கடைகோடி விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்'' என்பது, கடைகோடி விவசாயிகளின் ஆதங்கம்.
களத்தில் விவசாயிகள்
''விவசாயிகளே களத்தில் இறங்கி, அணைகளில் இருந்து, எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது; ஒவ்வொரு கிளைக் கால்வாய்க்கும் எவ்வளவு வினியோகிக்கப்படுகிறது.
எங்கே நீர் திருட்டு நடக்கிறது; எந்த வாய்க்காலில் அதிகளவு நீர் எடுக்கப்படுகிறது என்பதை கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை, 31ம் தேதி (இன்று முதல், வெள்ளகோவில் கிளை கால்வாய், பூஜ்யம் புள்ளியில் இருந்துதுவங்க, நீர்வளத்துறை மற்றும் போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளது, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம்.