/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம் அதிகபட்சமாக கிலோ ரூ.182க்கு விற்பனை

ADDED : மே 15, 2025 11:35 PM

உடுமலை, ; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த கொப்பரை ஏலத்தில், அதிக பட்சமாக கிலோவுக்கு, 182 ரூபாய் விலை கிடைத்தது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடக்கிறது.
நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, கப்ளாங்கரை, ராவணாபுரம், புக்குளம், தீபாலபட்டி, நல்லிகவுண்டம்பாளையம், விளாமரத்துப்பட்டி, புக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 விவசாயிகள், 90 மூட்டை அளவுள்ள, 4,500 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.172 முதல், 182 வரையும், இரண்டாம் தரம், ரூ.132.77 முதல், 169 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முகசுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும், 'இ-நாம்' திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.
இ-நாம் திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.