/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொப்பரை விலை உயர்கிறது : விவசாயிக்கு 'லாபம்' இல்லை
/
கொப்பரை விலை உயர்கிறது : விவசாயிக்கு 'லாபம்' இல்லை
கொப்பரை விலை உயர்கிறது : விவசாயிக்கு 'லாபம்' இல்லை
கொப்பரை விலை உயர்கிறது : விவசாயிக்கு 'லாபம்' இல்லை
ADDED : ஏப் 29, 2025 06:41 AM

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, வெள்ளகோவில், காங்கயம், அலங்கியம், மூலனுார் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த, 2018ல் கடும் வறட்சியால் தேங்காய் சாகுபடி பாதிக்கப்பட்டது. அப்போது, கொப்பரை வரத்து குறைந்து, விலை உயர்ந்தது. ஏழு ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது கொப்பரை விலை உயர்ந்திருக்கிறது.
கடந்த வார நிலவரப்படி, கிலோவுக்கு, 182 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கிறது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், தேங்காய் சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது.
வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரள வாடல் நோய் தாக்குதலால், அந்த மாவட்டங்களில் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; வரத்தும் குறைந்திருக்கிறது.
சந்தையில் கொப்பரை விலை உயர இதுவே முக்கிய காரணம்,' என்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கொப்பரை கொள்முதல் விலை அதிகரித்தாலும், விவசாயிகளுக்கு பலன் தருவதில்லை. நோய் தாக்குதல் காரணமாக மகசூல் முற்றிலும் குறைந்துள்ளது. நோய் வருவதற்கு முன், ஒரு தென்னை மரத்தில் இருந்து, 150 முதல், 170 தேங்காய் வரை விளைச்சல் கிடைக்கும்.
தற்போது, ஒரு மரத்தில் இருந்து, 20 முதல், 30 தேங்காய் மட்டுமே மகசூலாக கிடைக்கிறது. எனவே, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையினர் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
முன்பு, ஒரு தென்னை மரத்தில் இருந்து, 150 முதல், 170 தேங்காய் வரை விளைச்சல் கிடைக்கும். தற்போது, ஒரு மரத்தில் இருந்து, 20 முதல், 30 தேங்காய் மட்டுமே மகசூலாக கிடைக்கிறது.

