/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொப்பரை ஏலத்தில் ரூ.176.10க்கு விற்பனை
/
கொப்பரை ஏலத்தில் ரூ.176.10க்கு விற்பனை
ADDED : ஏப் 11, 2025 10:10 PM

உடுமலை, ; உடுமலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த கொப்பரை ஏலத்தில், அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.176.10க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, கோமங்கலம், ஜல்லிபட்டி, குடிமங்கலம், கப்பளாங்கரை, விளாமரத்துப்பட்டி, பூலாங்கிணர், காந்திநகர், தளி, எஸ்.வி.,மில்., உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 56 விவசாயிகள், 160 மூட்டை அளவுள்ள, 8 ஆயிரம் கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.160.10 முதல், ரூ. 176.10 வரையும், இரண்டாம் தரம், ரூ. 110.20 முதல், 143.61 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது என, திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.