/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோளப் பயிர்கள்அறுவடை மும்முரம்
/
சோளப் பயிர்கள்அறுவடை மும்முரம்
ADDED : டிச 26, 2025 06:26 AM

திருப்பூர்: அவிநாசி சுற்றுப்பகுதியில் தீவனப் பயிராக வெள்ளை சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மார்கழி மற்றும் தை மாத துவக்கத்தில் இது அறுவடை செய்யப்படுகிறது.
தற்போது கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இதனால், சோளப் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கதிர்கள் ஓரளவுக்கு முற்றிய நிலையில் உள்ள நிலங்களில், சோளப் பயிர் அறுவடை செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோளம் பெருமளவு குறைந்தளவு பரப்பில் உள்ள மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் நில உரிமையாளர்களான விவசாயிகளே இதை நேரடியாக அறுவடை செய்வது வழக்கம்.
கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் கட்டுப்படியாகாத அதிக கூலி என்பதாலும் தொழிலாளர்கள் அதிகளவில் இதில் ஈடுபடுவதில்லை. அவிநாசி பகுதியில், இதை டிராக்டர் வாகனத்தில் பொருத்திய இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடக்கிறது.

