/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பூங்கா சீரமைப்பு துவக்கம்
/
மாநகராட்சி பூங்கா சீரமைப்பு துவக்கம்
ADDED : மார் 18, 2024 12:32 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு உழவர் சந்தை ரோட்டில் மாநகராட்சி பூங்கா ஒன்று அமைந்துள்ளது. பூங்கா முழுவதும் முட்புதர்கள் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதைச் சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பூங்காவை பராமரிக்க மாநகராட்சி சார்பில், பொது நிதியில் இருந்து, 7.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பூங்கா பராமரிப்பிற்கான பூமி பூஜை நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன், குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன், முன்னாள் கவுன்சிலர் ஞானவேல், தி.மு.க., நிர்வாகிகள் ராஜ்குமார், பழனிச்சாமி, வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

