/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை துவக்கம்
/
10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை துவக்கம்
10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை துவக்கம்
10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை துவக்கம்
ADDED : ஏப் 19, 2025 11:21 PM
திருப்பூர்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மாவட்டத்தின் இரண்டு மையங்களில் நாளை (21ம் தேதி) துவங்குகிறது. வரும், 30 ம் தேதி வரை நடக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில், 104 மையங்களில், 29 ஆயிரத்து, 899 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 15ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது. தேர்வு மையங்களில் இருந்து மண்டல விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, விடைத்தாள் கொண்டு வரும் பணி, இரண்டு நாட்கள் நடந்தது.
நேற்று ஒவ்வொரு மையங்களில் முகாம் அலுவலர், முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் மற்றும் உதவி தேர்வர்களுக்கான பணி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. நாளை (21ம் தேதி) முதல், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. வரும், 30ம் தேதி வரை தினமும் காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்.