/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்; பணிகளில் மெத்தனம் என புகார் வாசிப்பு
/
குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்; பணிகளில் மெத்தனம் என புகார் வாசிப்பு
குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்; பணிகளில் மெத்தனம் என புகார் வாசிப்பு
குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்; பணிகளில் மெத்தனம் என புகார் வாசிப்பு
ADDED : ஜூலை 31, 2025 10:28 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில், சாலை, குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை, ஆக்கிரமிப்பு அகற்றுவது என பல்வேறு பிரச்னைகளை கவுன்சிலர்கள் அடுக்கினர்.
அவ்வகையில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
தங்கராஜ் (அ.தி.மு.க.,):
எனது வார்டில் நான்காண்டாக கேட்டும் காலனி பகுதிக்கு கான்கிரீட் ரோடு வரவில்லை. பதில் மட்டும் வருகிறது, செயல் எதுவுமில்லை. மேல்நிலைத் தொட்டியில் கேட் வால்வு பொருத்தாமல் குடிநீர்சப்ளையே நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டாக தெரு விளக்கு கேட்டு சலித்து போய் விட்டது. மின் வாரியம் - மாநகராட்சி இடையே இணக்கம் இல்லை. ரங்கநாதபுரத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு அகற்றாமல் வடிகால் கட்டும் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் (இ.கம்யூ.,):
ஒரு பணிக்கு தீர்மானம் நிறைவேற்றினால், எத்தனை நாளில் பணி செய்ய வேண்டும் என்று விதியை நிர்ணயிக்க வேண்டும். ஒரு குடிநீர் தொட்டியை பழுது நீக்கம் செய்ய தீர்மானம் போட்டு நிதி ஒதுக்கி, 4 மாதமாகியும் நடவடிக்கை இல்லை. குழாய் பதிப்புக்கு தோண்டிய ரோடு சேதமாகி கிடக்கிறது. பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும்.
திவ்யபாரதி (அ.தி.மு.க.,):
வி.பி.சிந்தன் நகர் ஓடையைத் துார்வார வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டிய ரோடுகள் சீரமைக்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. கான்கிரீட் ரோடு 2 ஆண்டாக கேட்கிறேன்.
பெனாசீர் (ம.ம.க.,):
வரும் 8ம் தேதி அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம், வேறு தேதிக்கு மாற்ற வேண்டும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமியர்கள் அதிகளவில் தொழுகைக்கு சென்று விடுவர்.
சின்னசாமி (அ.தி.மு.க.,);
எனது வார்டில் இதுவரை எந்தப் பிரச்னையையும் நான் போராட்ட அளவுக்கு கொண்டு வந்ததில்லை. தற்போது அங்குள்ள தி.மு.க., நிர்வாகிகள் தேவையில்லாமல், மாநகராட்சி பணியில் தலையிடுவதும், ஊழியர்களை மிரட்டுவதாகவும் உள்ளனர். அவர்கள் யாரை குறி வைக்கின்றனர். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென ஏன் இப்படி செய்கின்றனர். ஊழியர்களை மிரட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் அளித்தது?
மணிமேகலை (மா.கம்யூ.,):
சமுதாயக் கூடம் புனரமைப்பு பணிக்கு டெண்டர் எடுத்து ஓராண்டாகியும் இது வரை பணி துவங்கவில்லை. எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் செய்த பணியும் முழுமையாகவில்லை. நிதி வீணடிக்கப்பட்டு விட்ட து.

