/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளங்கலை பட்டப்படிப்புக்கு 2ல் துவங்குகிறது 'கவுன்சிலிங்'
/
இளங்கலை பட்டப்படிப்புக்கு 2ல் துவங்குகிறது 'கவுன்சிலிங்'
இளங்கலை பட்டப்படிப்புக்கு 2ல் துவங்குகிறது 'கவுன்சிலிங்'
இளங்கலை பட்டப்படிப்புக்கு 2ல் துவங்குகிறது 'கவுன்சிலிங்'
ADDED : மே 30, 2025 01:34 AM
திருப்பூர்,; அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு விண்ணப்பம், 7ம் தேதி www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பெயர், கல்வித்தகுதி, இ மெயில், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பெற்றோர், கல்லுாரியில் இணைய உள்ளோருக்கு உதவ, திருப்பூர் மாவட்டத்தில் எல்.ஆர்.ஜி., பெண்கள் கல்லுாரி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, பல்லடம் ஆகிய அரசு கலைக் கல்லுாரிகளில் உதவி மையம் அமைக்கப்பட்டது; பேராசிரியர்கள் வழிகாட்டினர்.
இருபது நாட்கள் அவகாசம் கடந்த, 27ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு, இன்று (30ம் தேதி) மாலை வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்தந்த கல்லுாரி இணையதளம் மற்றும் கல்லுாரி தகவல் பலகைகளில் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன், 2 மற்றும், 3ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங், 4ம் தேதி முதல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடக்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.