/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறைக்கு பின் கோர்ட்கள் திறப்பு
/
விடுமுறைக்கு பின் கோர்ட்கள் திறப்பு
ADDED : ஏப் 15, 2025 11:44 PM
திருப்பூர்; ஐந்து நாள் தொடர் விடுமுறைக்குப் பின் நேற்று கோர்ட்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
கடந்த வாரம், 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு அரசு விடுமுறை. அடுத்த நாள் சென்னை ஐகோர்ட் விடுமுறை. அடுத்த இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை.
அதன்பின், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறையாக இருந்தது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கோர்ட்களுக்கும் ஐந்து நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்து நாள் விடுமுறைகளுக்குப் பின் நேற்று முதல் மீண்டும் கோர்ட்கள் வழக்கம் போல் இயங்கத் துவங்கின.
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள அனைத்து கோர்ட்கள்; தாலுகா பகுதி களில் செயல்படும் கூடுதல் மாவட்ட கோர்ட்,மாவட்ட உரிமையியல் கோர்ட் மற்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்கள் உள்ளிட்ட அனைத்து கோர்ட்களிலும், நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் பணிக்குத் திரும்பினர்.

