ADDED : ஜன 16, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:முருங்கைக்காய் சீசன் நிறைவு பெற்று, வரத்து குறைந்துள்ளது. 100 முதல், 150 கட்டு வந்த தெற்கு உழவர் சந்தைக்கு, பத்து முதல், 20 கட்டு வருவதே அரிதாகியுள்ளது.
ஒரு காய், எட்டு முதல் பத்து ரூபாய்க்கும், கட்டு, 130 முதல், 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால், பலரும் முருங்கைக்காய் பதிலாக, முள்ளங்கி, கத்தரிக்காய், சுரைக்காய், புடலங்காய் வாங்கிச் செல்கின்றனர்.

