/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் கைது
/
திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் கைது
ADDED : ஆக 24, 2025 11:36 PM
உடுமலை; உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் அரசுப்பள்ளியில் திருடிய நபரை மடத்துக்குளம் போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி வளாகத்திலுள்ள சத்துணவு மையத்தில் பொருட்கள் தொடர்ச்சியாக திருடுபோனது.
முதலில் அரிசி உட்பட உணவு பொருட்களும், தொடர்ந்து 'காஸ்' சிலிண்டர்களும் திருடப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து விசாரித்து வந்த மடத்துக்குளம் போலீசார் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 26 என்ற நபரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்நபரிடம், பள்ளியில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது. அதே போல், குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளிலுள்ள கொப்பரை உலர்களங்களில் கொப்பரை, தேங்காய் திருடிய, கொழுமம் பகுதியை சேர்ந்த சிவா, 23, சூர்யா, 20, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜா, 20, ஆகியோரை குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
திருட்டுக்கு பயன்படுத்தி, சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.