ADDED : நவ 22, 2024 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் தாலுகா, கண்ணாடிபுத்துார் பகுதியில், சிவன் கோவில் பகுதியில், குட்டியுடன் கூடிய முதலை உலா வருகிறது. இங்குள்ள, குடிநீர் திட்ட உறிஞ்சு கிணறு மேற்பகுதியில், முதலை ஓய்வு எடுத்து வருகிறது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தும் ஆற்றுப்பகுதியில், முதலை காணப்படுவதால், பொதுமக்கள் அச்சமடைந்து, ஆற்றில் இறங்குவதையே தவிர்த்து வருகின்றனபர்.
மேலும், அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களான, கல்லாபுரம், ருத்திராபாளையம், கொழுமம், கண்ணாடிபுத்துார், மடத்துக்குளம், கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், முதலைகள் தென்படுவதோடு, தொடர்ந்து இப்பகுதிகளில், முதலைகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிகளுடன் சுற்றி வருகிறது.
எனவே, அமராவதி வனச்சரக அதிகாரிகள், அமராவதி ஆற்றில் சுற்றி வரும் முதலைகளை பிடித்து, அகற்ற முன் வர வேண்டும்.