/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவிந்த மக்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து
/
குவிந்த மக்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து
ADDED : அக் 13, 2025 01:09 AM

திருப்பூர்:தீபாவளி ஷாப்பிங் களைகட்டியதால், திருப்பூரில் பிரதான ரோடுகள், மக்கள் தலைகளாக காட்சியளித்தன.
குமரன் ரோட்டில் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் வரை, ரோட்டின் இடதுபுறம் மட்டும் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர்.
கோர்ட் ரோடு, குமரன் ரோடு சந்திக்கும் இடத்தில் டூவீலர் மட்டும் செல்லும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு, போக்குவரத்தை சரி செய்ய போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.
லட்சுமி நகரில் இருந்து டி.எம்.எப்., பாலம் வழியாக கோர்ட் ரோட்டுக்கு வரும் வாகனங்களில், டூவீலரை தவிர, மற்ற வாகனங்கள் நுழையாத வகையில், தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். மற்ற வாகனங்கள் வாலிபாளையம் வழியாக யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் ரோடு வழியே சென்றன.
ரோடு சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று மாலை, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஜம்மனை பாலம் வரை ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திச்சென்றவர்களை அழைத்து வாகனங்களை எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினர்.
முறையாக நிறுத்தாமல் சென்றவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.