/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதி ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி திருவிழா
/
ஆதி ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி திருவிழா
ADDED : அக் 13, 2025 01:09 AM

அவிநாசி:பெருமாநல்லுார் காளிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ ஆதி ரெங்கநாதர் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதல், அபிஷேக அலங்கார பூஜை, சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளுதல் ஆகியவை நடைபெற்றது.
நேற்று ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ ஆதி ரெங்கநாதர் பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்கள் கங்கையில் எழுந்தருள செல்லுதல், கவாள பூஜை, சாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. கோவிலுக்கு பிறந்த வீட்டுப் பெண்கள் அரிசி கூடை எடுத்து செல்லுதல்,பங்காளிகள் கைகோர்த்தல், பட்டி விளையாடுதல் ஆகியவை நடந்தன. தாசர்கள், பங்காளிகள், காளிபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.