/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பசுமையை நோக்கி...' மாரத்தான் போட்டி
/
'பசுமையை நோக்கி...' மாரத்தான் போட்டி
ADDED : அக் 13, 2025 01:10 AM

அவிநாசி:அவிநாசி அடுத்த கணியாம்பூண்டியில் கே.சி.எம். பவுண்டேஷன் சார்பில் 'பசுமையை நோக்கி' மாரத்தான் போட்டி நடந்தது.
கணியாம்பூண்டியில் துவங்கி, தீரன் சின்னமலை கல்லுாரி வரை என ஒரு கி.மீ., முதல் 12 கி.மீ., வரை மாரத்தான் போட்டி, பல்வேறு பிரிவுகளில் நடந்தது. எட்டு முதல் 50 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள், பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஞ்சித், ஆடிட்டர் சுந்தரராமன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி முன்னாள் தலைவர் மாரிமுத்து, சுதாகர், சுகன் சுகா மெடிக்கல் சென்டர் டாக்டர் சுந்தரன், வஞ்சிபாளையம் கூட்டுறவு சொசைட்டி முன்னாள் தலைவர் சிவசாமி, களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சுப்பிரமணியம், கிராமிய மக்கள் இயக்கம் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கே.சி.எம் பவுண்டேஷன் நிறுவனர் கணியாம்பூண்டி செந்தில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.