/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவா நிகேதன் பள்ளியில் எம்.யு.என். கருத்தரங்கு
/
சிவா நிகேதன் பள்ளியில் எம்.யு.என். கருத்தரங்கு
ADDED : அக் 13, 2025 01:11 AM

திருப்பூர்:மாணவர்களின் அறிவு, பேச்சுத்திறன் மற்றும் சர்வதேச விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் 'பள்ளிகளுக்கு இடையிலான ஐ.நா. மாதிரி'(எம்.யு.என்) கருத்தரங்கு சிவா நிகேதன் பள்ளி வளாகத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ. செல்வராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் துவக்கிவைத்தனர். இப்பள்ளி துவங்கிய 'ஒற்றைப் பயன்பாடு நெகிழியைத் தடை செய்' என்ற கையெழுத்து இயக்கத்தில், தங்கள் கையொப்பங்களைப் பதிவிட்டனர். பள்ளி இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபா ெஷட்டி, குழும உறுப்பினர்கள் பிரபாகரன், பிரதீப் ெஷட்டி, பள்ளி முதல்வர் கங்கா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரு நாள் கருத்தரங்கில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி விவாதங்களை முன்வைத்தனர். ஒவ்வொரு குழுவில் இருந்து பத்து பிரதிநிதிகள் அரையிறுதிக்குத் தேர்வாயினர்.