/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழாவில் கலக்கிய 'குட்டீஸ்'
/
கலைத்திருவிழாவில் கலக்கிய 'குட்டீஸ்'
ADDED : நவ 19, 2024 06:30 AM

என்ற மாலதியின் கவிதை வரிகள், நேற்று ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் காட்சிகளாய் கண்முன் விரிந்தது. எங்கு பார்த்தாலும், கடவுளர்களும், தேச தலைவர்களும் சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருந்தனர். ஆம்... அது இரண்டு நாள் கோலகலமாக நடந்த, திருப்பூர் மாவட்ட கலைத்திருவிழாவில் கண்ட காட்சிகள் தாம்.
அரசு பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒளிந்திருக்கும் பல்சுவை திறமைகளை வெளிக்கொணர, மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா போட்டி பள்ளி கல்வித்துறையால் நடத்தப்படுகிறது.
வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த, 15 ம் தேதி மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் துவங்கியது.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள், ஆறு முதல் எட்டு, மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு போட்டிகள் நடந்தது.
இரண்டாவது நாளான நேற்று, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும் தனிநபர், குழு போட்டிகள் நடத்தப்பட்டது. வட்டார அளவில் திறமை காட்டி முதலிடம் பெற்ற பள்ளிக்குழுக்கள் பங்கேற்றன.
ஒவ்வொரு பள்ளிக்கு இரு பொறுப்பு ஆசிரியர் வீதம் மாணவ, மாணவியர் பல்வேறு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். தங்கள் குழந்தைகளின் திறமையை காண பெற்றோர்களும் குவிந்தனர். இரு பள்ளியில் நடந்த போட்டியில், 837 பேர் பங்கேற்றனர்.
குழு பரத நாட்டிய போட்டியில் அதிகளவிலான குழந்தைகள் பங்கேற்றதை காண முடிந்தது. இரு நாட்கள் நடந்த போட்டி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இன்று மாநில போட்டிக்குதகுதியான பள்ளிகள் விபரம், மாவட்ட கல்வித்துறையால் வெளியிடப்பட உள்ளது.