/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டில் தீ விபத்து பொருட்கள் சேதம்
/
வீட்டில் தீ விபத்து பொருட்கள் சேதம்
ADDED : பிப் 16, 2025 10:50 PM

நெகமம், ;நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் லட்சுமணசாமி, 42, விவசாயி. இவர் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று, இவர் சொந்த பணிக்காக வெளியில் சென்றிருந்தார். குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்தில் வேலை செய்துள்ளனர்.
அப்போது, வீட்டின் உள் பகுதியில் இருந்து தீப்பிடித்து கரும் புகை வெளிவருவதை கண்ட குடும்பத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு தீயை அனைத்தனர். இதில், வீட்டில் இருந்த ஆடைகள், பணம், டி.வி., பிரிட்ஜ், மற்றும் இதர பொருட்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
லட்சுமணசாமி கொடுத்த புகாரின் பேரில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
* இதே போன்று, சொக்கனூர், முத்துக் கவுண்டனூரை சேர்ந்த துரைசாமி, குத்தகை தோட்டத்தில் விவசாயம் செய்கிறார். இவரது குடிசை வீட்டில் நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த உடமைகள் எரிந்து நாசமாயின.
கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் சொக்கனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு, துரைசாமி குடும்பத்துக்கு அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கினர்.

