/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு அரங்க நுழைவாயில் சேதம்
/
விளையாட்டு அரங்க நுழைவாயில் சேதம்
ADDED : செப் 05, 2025 11:44 PM

காங்கயம்:
காங்கயத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட விளையாட்டரங்கின் நுழைவாயில் மற்றும் அதிலிருந்த ஸ்டாலின் உருவப் படம் ஆகியன மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கயம், சிவன்மலை ஊராட்சியில் அண்மையில், புதிதாக கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவித்தபடி, தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என, 3 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஊர்களில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.
அவ்வகையில், காங்கயம் தொகுதியில், சிவன் மலையில் இந்த அரங்கம் கட்டி முடித்து திறக்கப்பட்டது. உள்விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயில் கட்டப்பட்டு அதன் மீது அரங்கத்தின் பெயர் பலகை மற்றும் ஸ்டாலின் உருவப்படமும் அமைக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒரு மாதம் ஆன நிலையில் சில மர்ம நபர்கள் கடந்த இரண்டு நாள் முன்பு ஆள் நடமாட்டம் இல்லாத போது, அதன் நுழைவாயிலில் உள்ள பெயர் பலகை மற்றும் ஸ்டாலின் படத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து, காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.