sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறுஞ்செய்தியால் அபாயம்: தொட்டதும் பணம் போனது

/

குறுஞ்செய்தியால் அபாயம்: தொட்டதும் பணம் போனது

குறுஞ்செய்தியால் அபாயம்: தொட்டதும் பணம் போனது

குறுஞ்செய்தியால் அபாயம்: தொட்டதும் பணம் போனது


ADDED : செப் 05, 2025 11:43 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

'ஆர்.டி.ஓ., - இசலான்' என்ற 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்தியை தொட்டதும், 2.10 லட்சம் ரூபாய் அபேஸ் ஆன விவரகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபூலுவபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 32; இவருக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலமாக, 'ஆர்.டி.ஓ., - இசலான்' என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை திறந்து பார்க்க தொட்டதும், அவர் வங்கி கணக்கில் இருந்த, 2.10 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் போரில், சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டனர். விசாரணையில், ராகுல் மந்தர் , 25 என்ற நபர் கையாடல் செய்ததை கண்டறிந்தனர். முறைகேடு செய்தவர், கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'இ-சலான்' செலுத்த வேண்டுமென, குறுஞ்செய்தி வந்தால் உடனே பதில் அளிக்க முயற்சிக்க வேண்டாம். உடனடியாக, 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்; www.cybercrime.gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம். பொதுமக்கள், https://echallan.parivahan.gov.in என்ற முகவரி வாயிலாக வரும் தகவலை மட்டும் ஏற்கலாம். இதுபோன்ற மற்ற இணையதள முகவரி வாயிலாக வரும் தகவலை ஏற்க வேண்டாம்; மொபைல் போன் பயன்பாட்டில் கவனமாக இருக்கவும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us