/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது பாட்டில் பதுக்கல்: அ.தி.மு.க., நிர்வாகி கைது
/
மது பாட்டில் பதுக்கல்: அ.தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : செப் 05, 2025 11:44 PM
திருப்பூர்:
காங்கயம் அருகே, பேக்கரியில் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அ.தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
காங்கயம் அடுத்த பாப்பினியைச் சேர்ந்தவர் சேனாதிபதி, 42. நாட்டார் பாளையத்தில், பேக்கரி நடத்தி வருகிறார். இவர் அ.தி.மு.க., காங்கயம் ஒன்றிய வர்த்தக அணி தலைவராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று டாஸ்மாக் மதுக்கடை களுக்கு மீலாடி நபி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சேனாதிபதி தனது கடையில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார்.
அப்பகுதியில் சோதனை நடத்திய காங்கயம் போலீசார் கடைக்குள் பதுக்கி வைத்திருந்த 16 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.