/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்காவில் உபகரணங்கள் சேதம் பயன்படுத்த முடியாத அவலம்
/
பூங்காவில் உபகரணங்கள் சேதம் பயன்படுத்த முடியாத அவலம்
பூங்காவில் உபகரணங்கள் சேதம் பயன்படுத்த முடியாத அவலம்
பூங்காவில் உபகரணங்கள் சேதம் பயன்படுத்த முடியாத அவலம்
ADDED : மே 15, 2025 11:16 PM

உடுமலை,;உடுமலை ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், விளையாட்டு பூங்காவில் உபகரணங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
உடுமலை நகரப்பகுதி ஸ்டேட் பேங்க் காலனி குடியிருப்பில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில், பொதுமக்களுக்கான விளையாட்டு பூங்கா உள்ளது. பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
பூங்காவில் குழந்தைகளுக்கான சறுக்கல், ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தாலும் அனைத்துமே பழுதடைந்து, அதிகமாகதுருப்பிடித்தும் உள்ளன. பராமரிப்பில்லாததால் அவற்றை பயன்படுத்த முடிவதில்லை.
குழந்தைகள் அதில் விளையாடுவதற்கும், பாதுகாப்பில்லாத நிலை தான் உள்ளது. நடைபயிற்சி செய்வதற்கும் தரைதள வசதி மேம்படுத்தப்படவில்லை. பெயரளவில் மட்டுமே இந்த பூங்கா உள்ளது.
இது மட்டுமில்லாமல், ராமசாமி நகர், ராஜலட்சுமி நகர் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும், பெயரளவில் மட்டுமே விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்த பூங்காக்களை பயன்படுத்தவும் முடியாமல், வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது. மக்கள் நடமாட்டமில்லாததால், அந்த பூங்காக்கள்தான் இரவு நேரங்களில் 'குடி'மகன்களுக்கான இடமாக மாறுகிறது. இதனால் அப்பகுதியினருக்கு பாதுகாப்பில்லாத நிலையும் ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள பூங்காக்களை முறையாக சீரமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.