/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நுழைவாயில் திறந்தவெளி சாக்கடை மூடாவிட்டால் அபாயம்'
/
'அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நுழைவாயில் திறந்தவெளி சாக்கடை மூடாவிட்டால் அபாயம்'
'அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நுழைவாயில் திறந்தவெளி சாக்கடை மூடாவிட்டால் அபாயம்'
'அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நுழைவாயில் திறந்தவெளி சாக்கடை மூடாவிட்டால் அபாயம்'
ADDED : ஏப் 24, 2025 06:39 AM
அவிநாசி; அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் நடந்தது.
இதில் இடம்பெற்ற கவுன்சிலர்களின் விவாதம்
ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): அவிநாசி பேரூராட்சி, 18வது வார்டு பகுதியில் குமரன் வீதி முதல் மெயின் ரோடு வரை உள்ள சாக்கடை வடிகால் உடைந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும் மாரியம்மன் கோவில் விநாயகர் கோவில்களுக்குள் மழைக்காலங்களில் கழிவு நீர் சூழ்ந்து நிற்கிறது.
விரைவில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இருபுறமும் வடிகால் அமைத்து தர வேண்டும்.
கருணாம்பாள் (காங்.,): -எட்டாவது வார்டுக்குட்பட்ட ஆசிரியர் காலனி குடியிருப்பு பகுதியில் நான்கு ரோட்டில் உள்ள மின்விளக்கு போதிய வெளிச்சம் இல்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக மாற்ற வேண்டும். புனித தோமையர் பள்ளிப் பகுதியிலும் தெருவிளக்குகளை மாற்ற வேண்டும்.
கோபாலகிருஷ்ணன் (காங்.,): கொரோனா காலத்தில் பேரூராட்சி கடைகளில் வாடகை வசூல் செய்தனர். அதை திருப்பித்தர அரசு அறிவுறுத்தியும், இன்னும் திருப்பித்தரவில்லை. உடனடியாக திருப்பித்தரவேண்டும்.
கார்த்திகேயன் (தி.மு.க.,): அவிநாசி பெரிய கோவில் நுழைவாயில் முன்பு திறந்தவெளி சாக்கடையாக உள்ளதை, ஓரிரு நாட்களுக்குள் மூடுவதற்குநடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர் விழாவில், தேர் நிலை சேர வரும்போது வடக்கயிறு பிடித்துஇழுத்து வரும் பக்தர்கள் சாக்கடை இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் தனலட்சுமி கூறினார்.
கூட்டம் துவங்கும் முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு இரண்டு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

