ADDED : ஜூலை 30, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு பயணிகள் பயன்படுத்தாமல், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது.
நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன், தலைவர் தனலட்சுமி ஆகியோர் அறிவுறுத்தலின்படி நேற்று நகராட்சி ஊழியர்கள் இப்பணியை மேற்கொண்டனர். பொக்லைன் மூலம் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. ''தாலுகா அலுவலகம் முன்பு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ரோட்டிலேயே பஸ்களை நிறுத்தி ஏற வேண்டியுள்ளது. நிழற்குடை அகற்றப்பட்ட இடத்தின் முன் உள்ள மின் கம்பங்களை ஓரமாக மாற்றி அமைத்தால், ஸ்டாப்பில் பஸ்கள் உள்ளே நிறுத்தப்படும்; வாகனங்கள் இடையூறின்றி செல்ல முடியும்'' என்கின்றனர் மக்கள்.