/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துறவி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 350 பேர் கைது
/
துறவி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 350 பேர் கைது
ADDED : டிச 04, 2024 10:52 PM

திருப்பூர்; வங்கதேசத்தில் ஆன்மிகத் துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மீகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் கைதானார். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அங்கு சிறுபான்மையாக உள்ள ஹிந்து மக்களை போலீஸ் துறையினர் தாக்கி கைது செய்து, கோவில்களை சேதப்படுத்தியதை கண்டித்தும், ஹிந்து மக்கள் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஹிந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
350 பேர் கைது
ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த காரணத்தால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 350 பேரை போலீசார் கைது செய்தனர்.