/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்
/
துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்
ADDED : செப் 23, 2025 11:54 PM
திருப்பூர்; தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் பணிபுரியும், துணை கலெக்டர் நிலையிலான 30 அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்து, அரசு கூடுதல் தலைமை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணிபுரியும் ஜெயராமன், வேலுார் மாவட்டத்துக்கு ஆய்வுக்குழு அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வருவாய் கோட்ட முன்னாள் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், சேலம் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.