UPDATED : நவ 10, 2026 07:06 PM
ADDED : நவ 10, 2026 07:03 PM
காங்கயம்: காங்கயம் ஒன்றியத்தில், படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், 1.09 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. தம்மரெட்டிபாளையத்தில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, 9.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் பணி நடந்து வருகிறது.
படியூர், நத்தக்காடையூர், பாப்பிணி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில், 11.66 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன.தோட்டக்கலை இயக்கம் சார்பில், மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, கலெக்டர் முத்துக்குமரன் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மகாராஜ், வேளாண் இணை இயக்குனர் பாமாமணி, துணை இயக்குனர் (தோட்டக்கலை) சசிகலா, தாசில்தார் கதிர்வேல், பி.டி.ஓ.,கள் வெண்ணிலா, ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
