/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்தாரா?
/
தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்தாரா?
ADDED : அக் 30, 2025 12:37 AM
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கள்ளிப்பாளையத்தை சேர்ந்த 25 வயது பெண், தற்போது, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகவும் பொதுமக்களிடம் தகவல் பரவியது.
பொங்கலுார் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட பெண், காங்கயம் தனியார் மருத்துவமனையில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கர்ப்பிணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பள்ளிப் பருவம் முதல் இரும்புச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகிறோம். இரும்பு சத்து மாத்திரைகளும் வழங்குகிறோம். ஆனால், பலரும் அதை எடுத்து கொள்வதில்லை. இதனால், ரத்த சோகை ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுகின்றனர். முருங்கைக்கீரை உள்ளிட்ட கசப்பு சுவையுடைய கீரைகள் அனைத்திலும் இரும்பு சத்து உள்ளது. அவற்றை சாப்பிட்டாலே இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

