/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாஸ்மாக்' பாரில் தகராறு: பா.ஜ. நிர்வாகி தலைமறைவு
/
'டாஸ்மாக்' பாரில் தகராறு: பா.ஜ. நிர்வாகி தலைமறைவு
'டாஸ்மாக்' பாரில் தகராறு: பா.ஜ. நிர்வாகி தலைமறைவு
'டாஸ்மாக்' பாரில் தகராறு: பா.ஜ. நிர்வாகி தலைமறைவு
ADDED : நவ 15, 2025 01:08 AM
காங்கயம்: காங்கயம் அருகேயுள்ள மேட்டுப்பாறையில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் செயல்படுகிறது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ. செயலாளர் விஜயகுமார், 48, என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இவை செயல்படுகின்றன. இதிலுள்ள பார், திருப்பூரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
விஜயகுமாருக்கும் அழகர்சாமிக்கும் வாடகை தருவது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சில ஆட்களுடன், வாகனங்களில் சென்ற விஜயகுமார் அங்கு வேலை செய்யும் ஆட்களை தாக்கியுள்ளார். இதில் திருப்பூர், குமார் நகர் கார்த்திக், 25; கருப்புசாமி, 22; பெத்தசாமி, 25 மற்றும் ஆனந்த், 20, ஆகியோர் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தாக்குதலில், ஈடுபட்ட பங்காம்பாளையம் சுரேஷ், 25, மற்றும் மனோஜ்குமார், 27 ஆகியோர் கைது செய்யப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக, தலைமறைவான பா.ஜ. நிர்வாகி விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

