/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை துாய்மை பணியாளர்கள் அதிருப்தி
/
நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை துாய்மை பணியாளர்கள் அதிருப்தி
நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை துாய்மை பணியாளர்கள் அதிருப்தி
நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை துாய்மை பணியாளர்கள் அதிருப்தி
ADDED : அக் 21, 2024 06:26 AM
உடுமலை : உடுமலை வட்டார அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால், அதிருப்தியில் உள்ளனர்.
துாய்மை பாரத திட்டத்தின் கீழ், கிராமப்புற அரசுப்பள்ளிகளில் துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
துவக்கப்பள்ளிகளில், பணியாளர்களுக்கு, 1,300 ரூபாயும், நடுநிலைப்பள்ளி பணியாளர்களுக்கு, 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு, மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளிவிட்டு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு துவங்கியது முதல், இப்பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.
மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதால், ஆசிரியர்கள் கூடுதல் தொகை வழங்கி பணிக்கு வர அழைக்கின்றனர்.
ஆனால் இவ்வாறு அதிக நாட்கள் அரசின் சார்பில் ஊதியம் வழங்காமல் தாமதமாவதால், பணியாளர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இப்பணியாளர்களுக்கு, மாதாந்திர ஊதியம் வழங்குவதிலும் அரசு அலட்சியமாக இருப்பதால், வேதனையில் உள்ளனர்.
ஆசிரியர்களின் சார்பிலும், அவர்களின் சொந்த செலவில் தொடர்ந்து ஊதியம் வழங்க முடிவதில்லை. இதனால் பள்ளிகளில் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்படுகிறது.
மாற்றம் தேவை
இத்திட்டம் துவங்கியது முதல், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து இழுபறியாகவே நடக்கிறது.
இதனால் பணிகள் பாதிக்கப்படுவது ஒருபக்கம் இருப்பினும், துாய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் எந்த பயனும் இல்லாத நிலைதான் உள்ளது.
இதனால் உள்ளாட்சி நிர்வாகம் அல்லது கல்வித்துறையின் சார்பில், இப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கும் வகையில் திட்டத்தில், மாற்றம் தேவை என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.