/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுபட்டவர்களுக்கு நாளை குடற்புழு மாத்திரை வினியோகம்
/
விடுபட்டவர்களுக்கு நாளை குடற்புழு மாத்திரை வினியோகம்
விடுபட்டவர்களுக்கு நாளை குடற்புழு மாத்திரை வினியோகம்
விடுபட்டவர்களுக்கு நாளை குடற்புழு மாத்திரை வினியோகம்
ADDED : பிப் 14, 2024 11:33 PM
திருப்பூர்: 'குடற்புழு நீக்க மாத்திரை விடுபட்டவர்களுக்கு வரும், 16ம் தேதி(lநாளை) வினியோகிக்கப்படும்,' என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு, ஒன்று முதல், 19 வயது வரை உள்ள, 7.8 லட்சம் குழந்தைகள், 20 முதல், 30 வரை உள்ள (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) 2.04 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்தது.
கடந்த, 9ம் தேதி மேம்படுத்த, ஆரம்ப, துணை சுகாதார நிலையம், கிராம சுகாதார செவிலியர் மூலம், அங்கன்வாடி மையங்கள் உதவியுடன் காலை முதல் மாலை வரை 'அல்பென்சோல்' மாத்திரை வினியோகிக்கும் பணி நடந்தது.
ஒன்று முதல், 19 வயதுள்ளவர்களுக்கு, 6.29 லட்சம் (89 சதவீதம்) மாத்திரைகளும், 20 முதல், 30 வயதுடையவருக்கு, 1.57 லட்சம் மாத்திரைகளும் (79 சதவீதம்) வழங்கப்பட்டது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கு, 70 ஆயிரம் மாத்திரைகளும், 30 வயதுக்கு உட்பட்டோருக்கு, 42 ஆயிரம் மாத்திரைகள் இன்னமும் வழங்க வேண்டியிருக்கிறது.
மீதமுள்ள மாத்திரைகள் வரும், 16ம் தேதி(நாளை) வினியோகிக்கப்படும், என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

