ADDED : பிப் 03, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் வடக்கு மாவட்ட புதிய தலைவர் பொறுப்பேற்ற பிறகு, மாவட்ட அளவிலான பா.ஜ., முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று, முதன்முதலாக ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.